புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நமது ஜமாஅத் புதிய நிர்வாகிகள் அனைவரும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் வீட்டை அல்லாஹ்விற்கு விருப்பமான வழிகளில் மட்டும் நிர்வாகம் செய்ய வாழ்த்துக்கள்..
இதுவரை பதவியில் இருந்து சிறப்பாக செயல்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அமைத்து கொடுத்தவர்களுக்கும் அல்லாஹ் நல்கிருபை செய்யட்டும்... இன்ஷா அல்லாஹ்...
அல்லாஹ் கூறுகின்றான்...
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன் 9:18)

