300 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் மிக்க கொல்லன் பட்டரை தெரு பள்ளிவாசலின் கட்டுமானப்பணிக்கு உதவிடுங்கள் !



அஸ்ஸலாமு அலைக்கும்!


இராமநாதபுரம், வெளிப்பட்டினம், கொல்லன் பட்டரை தெரு பள்ளிவாசல், சில நூற்றாண்டுகளை கடந்த மிகப்பழமையானது. இதுவே நகரின் முதல் ஜும்மா பள்ளிவாசல்.

பழைய பள்ளியின் தோற்றம்




இப்பழமையானபள்ளி வலுவிழந்து மழைநீர் ஒழுகி மராமத்து செய்ய முடியாத நிலையில் இருந்ததால் இப்பள்ளியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பள்ளிவாசலை நிர்மாணிக்க ஜமாத்தார்கள் முடிவு செய்து கட்டுமானப்பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய பங்களிப்பு மட்டும் இப்புதிய பள்ளி கட்டுமானத்திற்க்கு போதாது என்பதால் கொடையுள்ளம் கொண்ட சகோதரர்களாகிய தங்களின் உதவியையும் நாடியுள்ளோம்.


கட்டவிருக்கும் புதிய பள்ளியின் அமைப்பு



எனவே அல்லாஹ்வின் இல்லத்திற்காக தாராளமான உதவியை பொருளாகவோ அல்லது நிதியாகவோ தந்து அல்லாஹ்வின் பேரருளை அடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
பள்ளிவாசல் கட்டுமானக்குழு,
கொல்லன் பட்டரை தெரு
வெளிப்பட்டினம்- 623504
இராமநாதபுரம் மாவட்டம்.

உங்கள் நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி 

Account Number    : 357002010910338
Account Name        : Kollam Pattarai New Pallivasal
IFSC Code               : UBIN0535702
Union Bank of India
Ramanathapuram Branch
Tamilnadu, India.
தொடர்புக்கு:
முன்னாநூர்தீன் - 9486744644
அலாவுதீன்            - 9944974295
அன்வர் சிராஜுதீன் - 9943299901

****







300 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் மிக்க கொல்லன் பட்டறை தெரு பள்ளிவாசலின் பழமையான தோற்றம் 


இறைவன் நாடினால் புதிதாக கட்டவிருக்கும் பள்ளிவாசலின்
அழகிய அமைப்புதோற்றம் 



PROPOSED CONSTRUCTION PLAN DIAGRAM
ABSTRACT - ESTIMATE SHEET

*******
இன்ஷா அல்லாஹ் !

கொல்லன்பட்டரை தெருவில் அமையவிருக்கும் புதிய பள்ளிவாசலின் தோற்றம்!
   

புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்தவர்கள்... ஏமாற்றம்

அடையாள அட்டை பெற அலைமோதும் மக்கள்


தேர்தல் வருவதை முன்னிட்டு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தும் ,சரியான தகவல் கிடைக்காமலும் விசாரணை செய்ய முடியாத காரணத்தை கூறி, தள்ளுபடி செய்வதாக கூறப்படுவதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். தேர்தல் அடையாள அட்டை மக்களுக்கு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருப்பதால் அடையாள அட்டை பெறுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் தேர்தலின் போதுதான் அடையாள அட்டைகள் வழங்கும் பணி துரிதமாக இருக்கும் என்பதால், தேர்தல் நேரத்தில் புதிய வாக்காளர்களுக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக முகாம்கள் அமைத்து புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் போன்ற பல்வேறு பணிகளை செய்தனர். இம்முகாம்களில் புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பித்தவர்கள் பின் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்கள் புதிய அடையாள அட்டை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காதவர்களும் உண்டு. அதுவும் கடைசியாக நடந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு ஒப்புகை சீட்டும் வழங்காததால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா , குப்பைகளுக்கு சென்றதா என தெரியாத நிலையில், தினமும் மக்கள் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் என நடையாய் நடக்கின்றனர். இதுகுறித்து சரியான தகவல் கூறுவதற்கும் ஆட்கள் இல்லாத நிலையில், நீண்ட தூரத்தில் இருந்து வருவோர் தேர்தல் அடையாள அட்டை கிடைக்காமலும், எப்போது கிடைக்கும் என்ற பதிலும் இல்லாததால் ,மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.

தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கேட்கும்போது ,""பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து கடைசி தினத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என கூறவில்லை என்ற மழுப்பலான பதிலை கூறுவதால்,'' பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

-தினமலர்-